×

கள்ள நோட்டு வழக்கில் தமிழக ஆசாமி மும்பையில் கைது: ரூ.7.55 லட்சம் மதிப்பு கள்ள நோட்டு பறிமுதல்

மும்பை: கள்ள நோட்டு வழக்கில், திருப்பத்தூரை சேர்ந்த நபரை மும்பை போலீசார் நேற்று கைது செய்தனர். மும்பையில் கள்ள நோட்டு புழக்கத்தில் விட்ட பாஸ்கர் நடார் (43) என்பவரை மும்பை போலீசார் கடந்த 3ம் தேதி கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1.28 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டு கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், தமிழகத்தில் திருப்பத்தூரை சேர்ந்த சரவணன் (45) என்பவர் கள்ள நோட்டுக்களை சப்ளை செய்வதாகவும், அவருக்கு கூரியர் ஏஜென்ட் போல தான் செயல்பட்டதாகவும் பாஸ்கர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து, திருப்பத்தூரில் உள்ள சரவணன் வீட்டில் ரெய்டு நடத்திய போலீசார், அவரது வீட்டில் இருந்து  1,476 புதிய ரூ.500 நோட்டு, 85 ரூ.200 நோட்டுக்கள் என மொத்தம் ரூ.7.55 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் மற்றும் இவற்றை அச்சடிக்க பயன்படுத்திய பிரின்ட்டர், ஸ்கேனர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். கள்ள நோட்டு வழக்கில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரை மும்பை போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : arrest ,Asami ,Mumbai , Counterfeit note, Tamil Nadu Assamese, Mumbai, Arrested
× RELATED புகைப்பிடித்துக் கொண்டே விமான...