×

பரபரப்பான சூப்பர் ஓவரில் அயர்லாந்து ஆறுதல் வெற்றி

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் அணியுடன் நடந்த 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், அயர்லாந்து அணி சூப்பர் ஓவரில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது.கிரேட்டர் நொய்டா விளையாட்டு வளாக மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன் குவித்தது (கெவின் ஓ 26, டெலானி 37, டெக்டர் 31). அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியும் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்ததால் ஆட்டம் சரிசமனில் முடிந்தது (டை). குர்பாஸ் 42, கேப்டன் அஸ்கர் 32, ரஷித் கான் 14 ரன் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டதில் ஆப்கானிஸ்தான் 1 விக்கெட் இழப்புக்கு 8 ரன் எடுக்க, அடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கடைசி பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. ரஷித் வீசிய பந்தை கெவின் ஓ பிரையன் சிக்சராக விளாசி ஆறுதல் வெற்றியை வசப்படுத்தினார்.மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆப்கானிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கெவின் ஆட்ட நாயகன் விருதும், குர்பாஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.


Tags : Ireland ,consolation win ,Sensational Super Over , Ireland, consolation, sensational ,Super Over
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...