×

மெட்ரோ ரயில் நிலையத்தில் தற்கொலை செய்தவர் அடையாளம் தெரிந்தது

ஆலந்தூர்: பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய 2வது மாடியில் இருந்து கடந்த 6ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க ஒருவர்  திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து பரங்கிமலை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று  இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை செய்து கொண்டவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தற்கொலை செய்துகொண்டவர் அமைந்தகரையை சேர்ந்த சாய்பிரசாத் (42), போரூரில்  உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர் 18 லட்சம் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து இறந்த சாய்பிரசாத் சடலத்தை பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

* நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராமமூர்த்தி (50), நேற்று முன்தினம் இரவு பெரும்புதூரில் இருந்து தண்டையார்பேட்டைக்கு லாரியில் எண்ணெய் ஏற்றிச் சென்றார். கோயம்பேடு அருகே சென்றபோது, டீ குடிப்பதற்காக சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கியபோது, வேகமாக வந்த லோடு வேன் மோதி இறந்தார்.
* புளியந்தோப்பு நரசிம்ம நகரை சேர்ந்த எழிலரசன் (30) என்பவர் மீது 2 கொலை மற்றும் 3 கொலை முயற்சி, ஆள்கடத்தல் என பல்வேறு வழக்குகள் புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ், ஓட்டேரி காவல் நிலையங்களில் உள்ளன. நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த இவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
* கொடுங்கையூர் அன்னை சத்யா நகரில் உள்ள அம்மன் கோயிலை நிர்வாகிப்பதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், மாரியம்மாள் (42) என்பவரை தாக்கிய, அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (62), அவரது மகன் வெங்கடேசன் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* ராயப்ேபட்டை லாயிட்ஸ் சாலை கட்ட தொட்டி தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாஸ்கர் (32), கடந்த 7ம் தேதி இரவு மெரினா காமராஜர் சாலையில் ஆட்டோவில் சென்றபோது, கார் மோதி படுகாயமடைந்தார். இவரை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். விபத்து ஏற்படுத்திய கொடுங்கையூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த செந்தூர் பாண்டியன்(23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* வேளச்சேரி வீட்டுவசதி வாரிய  குடியிருப்பை சேர்ந்த சண்முகம் (45) நேற்று முன்தினம் இரவு தனது வேனை  வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். நேற்று காலை வந்து பார்த்தபோது வேனில் இருந்த பேட்டரியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்பகுதியில் 4 வாகனங்களில் இருந்து பேட்டரி திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : suicide bomber ,station ,suicide ,Metro Railway Station , Metro ,Railway Station, ,committed suicide,
× RELATED காவல்நிலையம் முன் டிக்டாக் வாலிபர் கைது