×

சட்டமன்ற கூட்ட தொடர் எதிரொலி போலீஸ் நிலையங்களில் இரவில் பெண் கைதிகளை தங்க வைக்க தடை: டிஜிபி உத்தரவு

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர், நேற்று முன்தினம் துவங்கி நடந்து வருகிறது. முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் துறை குறித்து இந்தக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியினர் பேச உள்ளனர்.இந்நிலையில், டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘பொதுமக்கள் எவ்வித போராட்டத்தில் ஈடுபட்டாலும், அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். பிரச்னையை பெரிதாக்கும் வகையில் செயல்படக் கூடாது.

ஜாதி, மத ரீதியான மோதல்கள் ஏற்படாமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். போலீஸ் நிலையங்களில் நடக்கும், ‘லாக்கப் இறப்பு’களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதற்காக, குற்றவாளிகள், குற்றம் சாட்டப்படும் நபர்களிடம், பகல் நேரங்களில் மட்டுமே விசாரணை நடத்த வேண்டும். விசாரணைக்கு பின் அவர்களை, போலீஸ் நிலையங்களில் இரவு நேரத்தில் தங்க வைக்கக் கூடாது.குறிப்பாக, பெண்களை கண்டிப்பாக போலீஸ் நிலையங்களில் தங்க வைக்கக் கூடாது. இந்நிலை ஏற்பட்டால், அது குறித்து உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.Tags : inmates ,assembly meetings ,Prohibition ,prisoners ,Assembly Meeting Series ,police stations , Assembly Meeting ,Series,police stations, DGP ,directive
× RELATED டிஜிபி அலுவலகத்தில் எஸ்ஐ உட்பட 10...