×

திண்டிவனம் திமுக எம்எல்ஏ சீதாபதி வெற்றி அதிமுக வழக்கு தள்ளுபடி

சென்னை: திண்டிவனம் தொகுதியில் கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுக வேட்பாளர் சீதாபதி, அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன் உள்ளிட்ட 11 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் திமுக வேட்பாளர் சீதாபதி 61,879 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன் 61,778 வாக்குகளும் பெற்றனர். 101 வாக்குகள் வித்தியாசத்தில் சீதாபதி வெற்றி பெற்றார். இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ. சீதாபதி வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதிமுக வேட்பாளர் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் போதிய ஆவணங்களுடனும், சாட்சியங்களுடனும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

Tags : MLA ,Sitapathi ,Tindivanam DMK ,AIADMK , Tindivanam, DMK MLA Sitapati, Success, AIADMK case, dismissed
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...