×

ஐந்து நாள் வேலை... வேலைக்கு ஆகல...சிக்கிமில் மீண்டும் 6 நாள் அலுவல்

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் அரசு ஊழியர்களின் வேலை நாட்கள் மீண்டும் 6 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. சிக்கிமில்  முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்தி மோர்ச்சா, பாஜ  கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு  பின்னர், கடந்த மே மாதம் முதல் அரசு ஊழியர்கள், பொதுத்துறை அலுவலகங்களின்  வேலை நாட்கள் 5 தினங்களாக குறைக்கப்பட்டது. முன்னதாக, வாரத்தில் 6 நாட்கள்  வேலை நாட்களாக இருந்தது. இந்நிலையில், அரசு ஊழியர்கள், பொதுத்துறை  அலுவலகங்களின் வேலை நாட்கள் மீண்டும் 6 நாட்களாக மாற்றப்படுவதாக அரசு  நேற்று அறிவித்தது.  

இது குறித்து மாநில முதன்மை செயலர் எஸ்.சி. குப்தா  கூறுகையில், ``வேலை நாட்கள் 5 நாட்களாக குறைக்கப்பட்ட பின்னர் அரசு  ஊழியர்களின் செயல்திறன் திருப்திகரமாக இல்லாததால், வேலை நாட்களை மீண்டும்  6 ஆக மாற்றி உள்ளது. இது வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.  மாதத்தின் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் விடுமுறை தினங்களாக  அறிவிக்கப்படுகிறது’’ என்று கூறினார்.

Tags : Sikkim , Five Day Work, Sikkim State
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...