×

ஈரானில் சிக்கிய மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனை: வைரஸ் பாதிப்பு இல்லாதோர் முதற்கட்டமாக அழைத்து வரப்படுவர்

நாகர்கோவில்: கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்டு வருவதற்காக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளன என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கு மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் உட்பட தமிழக மீனவர்கள் 721 பேர், தீவுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதை தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரிகள் ஈரானில் தங்கியுள்ள மீனவர்களை சென்று சந்தித்தனர். அதற்கு அவர்களை இந்தியா அழைத்து வர இன்னும் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், மீனவர்களை போர்க்கால அடிப்படையில் மீட்டு தாய்நாட்டுக்கு அனுப்ப வேண்டுமென  சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆண்டணி பிரதமர், வெளிவிவகாரத்துறை அமைச்சர் மற்றும் ஈரானிலுள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றுக்கு வேண்டுகோள் வைத்தார்.  இதற்கு இந்திய தூதரகம் பதில் அனுப்பியுள்ளது. அதில், இவர்களை மீட்டு இந்தியா அனுப்ப தேவையான நடவடிக்கைகளை முன்னுரிமை கொடுத்து செய்துவருகிறோம். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறையினரோடு தொடர்பு கொண்டு வருகிறோம். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : fishermen ,Iran , Iran, medical examination, virus
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...