×

இந்திய அளவில் தனியார் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் வி.ஐ.டி முதலிடம்: கியூஎஸ் அமைப்பு அறிவிப்பு

வேலூர்: இந்திய அளவில் தனியார் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் விஐடி முதலிடம் பெற்றுள்ளதாக கியூஎஸ் அமைப்பு அறிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் தரமான கல்வி பாடத்திட்டம், ஆராய்ச்சி இதழ்கள் வெளியிடுதல், தொழிற்சாலையுடன் இணைந்த கல்வி முறை ஆகியவற்றை ஆண்டுதோறும் இங்கிலாந்து நாட்டின் கியூஎஸ் தரவரிசை அமைப்பு ஆய்வு செய்து தரவரிசை சான்று வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் 2020க்கான, உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் விஐடி 450 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது. இந்திய அளவில் தனியார் பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் விஐடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியலில் விஐடி கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 150 இடங்கள் அளவிற்கு முன்னேறி உள்ளது. இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது. அதேபோல் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்பர்மேஷன் சிஸ்டம் மற்றும் வேதியியல் பாடங்களில் விஐடி 50 இடங்கள் முன்னேறி உள்ளது.

விஐடியின் கெமிக்கல் இன்ஜினியரிங் 350வது  இடங்களுக்குள்ளும், மெக்கானிக்கல் மற்றும் உற்பத்தி பாடங்களில் 450வது இடங்களுக்குள் தரவரிசை கியூஎஸ் பட்டியலில் முதன்முறையாக இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.கியூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை 2020ன் ஆய்வு மொத்தம் 48 பிரிவுகளை உள்ளடக்கியது, இவைகள் ஐந்து பாடப் பிரிவுகளாக தொகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய அரசின் சார்பில், நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு ஆகியவற்றை செயல்படுத்துவதில் விஐடி முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : system announcement ,VIT ,QS ,universities ,India , India, private universities, VIT tops
× RELATED வேலூரில் தினகரன் -விஐடி இணைந்து...