×

கோவையில் கடைக்குள் புகுந்த கும்பல் எஸ்டிபிஐ செயலாளர் மீது பயங்கர தாக்குதல்

கோவை: கோவையில் கடைக்குள் புகுந்த கும்பல் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் மீது பயங்கர தாக்குதல் நடத்திவிட்டு தப்பியது.  கோவை குனியமுத்தூர் இடையர்பாளையத்தை சேர்ந்தவர் முகமது இக்பால்(52). இவர், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளராக உள்ளார். காட்டூர் ராம்நகரில் டயர் கடை வைத்துள்ளார். அவர் நேற்று மதியம் 3 மணியளவில் கடையில் இருந்தார். ஊழியர் ஒருவரும் உடன் இருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், கம்பி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் கடைக்குள் திடீரென புகுந்தது.  முகமது இக்பால் சுதாரித்து எழுவதற்குள் அவரை பயங்கரமாக தாக்கினர். உடன் இருந்தவர் தடுக்க முயன்றும் முடியவில்லை.

 இதில் முகமது இக்பாலுக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ள கடைக்காரர்கள் ஓடி வருவதற்குள் அந்த கும்பல் தப்பி சென்று விட்டது. பின்னர், முகமது இக்பாலை மீட்டு தனியார் மருத்துவமனையில் ேசர்த்தனர். பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, முகமது இக்பால் மர்ம நபர்களால்  தாக்கப்பட்டதை கண்டித்து அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய  கூட்டமைப்பு தலைவர் ராஜா உசேன் தலைமையில் நேற்று இரவு உக்கடத்தில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.கோவையில் குண்டுவீச்சு, தாக்குதல் போன்ற சம்பவங்கள் தொடர்வதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்து முன்னணி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு
கோவை காட்டூர் ரங்கே கோனார் வீதியில் மாவட்ட இந்து முன்னணி அலுவலகம் உள்ளது. நேற்று காலையில் இங்கு வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் அலுவலகத்தை திறக்க வந்தார். அப்போது வாசலில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் பீர்பாட்டில் உடைந்து சிதறி கிடந்தது.  யாரோ மர்ம நபர்கள் பீர்பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி திரியை பற்ற வைத்து வீசியுள்ளனர். ஆனால் அது  வெடிக்கவில்லை. உடனே, காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை கமிஷனர் பாலாஜி சரவணன், போலீசார் பார்வையிட்டு ஆகியோர் வந்து பார்வையிட்டனர். நள்ளிரவோ அல்லது அதிகாலையிலோ மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இது தொடர்பாக காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Terrorist attack ,STBI , Coimbatore, estipiai Secretary, Attack
× RELATED தீவிரவாதிகள் தாக்குதலில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் பலி