×

வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீனவர்கள் மோதல்

வேதாரண்யம்: நாகை  மாவட்டம்  வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் கடல் பகுதிகளில் நேற்று நாகை  மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்  பிடித்து கொண்டிருந்தனர். இதையறிந்த வெள்ளப்பள்ளம் மீனவர்கள் நாகை மீனவர்களை அங்கிருந்து விரட்டுவதற்காக  10 பைபர் படகுகளில் சென்றனர்.  அப்போது நடுக்கடலில் மீன் பிடித்து  கொண்டிருந்த நாகை விசைப்படகு மீனவர்கள் அதிவேகமாக படகை ஓட்டி சென்றனர்.  ஆனால் விடாமல் அவர்களை பின்தொடர்ந்து விரட்டி  சென்றனர். இதில் ஆத்திரம் அடைந்த நாகை மீனவர்கள், தங்கள் படகில்  வைத்திருந்த கற்கள், சோடா பாட்டில் கொண்டு வெள்ளப்பள்ளம் மீனவர்கள் மீது வீசி தாக்குதல் நடத்திவிட்டு நாகையை நோக்கி தப்பி  சென்றனர். கல்வீச்சு தாக்குதலில் வெள்ளப்பள்ளம் மீனவர்கள்  10 பேர்  படுகாயமடைந்ததால் அனைவரும் வெள்ளப்பள்ளம் கடற்கரைக்கு  திரும்பினர். இதையடுத்து 10 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது.



Tags : Fishermen ,Mediterranean Sea ,Vedaranyam Vedaranyam ,Fishermen Clash , Vedaranyam, Mediterranean, Fishermen
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...