×

‘ஓ மை கடவுளே’ படத்தில் எனது செல்போன் எண் கதாநாயகியை கேட்டு தினமும் தொந்தரவு: கமிஷனர் அலுவலகத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் புகார்

சென்னை:‘ஓ மை கடவுளே’ என்ற படத்தில் எனது செல்போன் எண்ணை பயன்படுத்தியதால், எனக்கு தினமும் 50 பேர் போன் செய்து கதாநாயகியை கேட்டு தொந்தரவு செய்வதாக ரியல் எஸ்ேடட் அதிபர் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மகாகவி பாரதியார் நகரை சேர்ந்த ரியல் எஸ்ேடட் அதிபர் பூபாலன்(48) என்பவர் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:நான் ரியல் எஸ்ேடட் தொழில் செய்து வருகிறேன். நான் கடந்த 19 ஆண்டுகளான 98410 22485 என்ற எண்ணை பயன்படுத்தி வருகிறேன். எனது வாடிக்கையாளர்கள் தொழில் பங்குதாரர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் நான் இந்த எண்ணைத்தான் கொடுத்துள்ளேன். இந்த நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு ‘ஓ மை கடவுளே’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அஷ்வத் மாரிமுத்து என்பவர் இயக்கி உள்ளார்.

படத்தில், விஜய் சேதுபதி கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அசோக் செல்வன் கதாநாயகனாகவும், வாணி போஜன் கதாநாயகியாகவும், நடித்திருக்கிறார். அந்த படத்தில் மீராவாக நடித்த கதாநாயகி, கதாநாயகன் அசோக் செல்வனுக்கு தன் செல்போன் எண்ணை கொடுப்பார். அந்த எண் தான், நான் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் செல்போன் எண். படத்தை பார்த்தவர்கள் உண்மையில் கதாநாயகி வாணி போஜனின் செல்போன் எண் என்று நினைத்து தினமும் எனக்கு 50க்கும் மேற்பட்டோர் போன் செய்து வாணி போஜன் இருக்கிறாரா, நான் அவரிடம் பேச வேண்டும் என தொல்லை கொடுக்கின்றனர். இதனால் என் தொழில் மந்த நிலை ஏற்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனவே என் செல்போன் எண்ணை ‘ஓ மை கடவுளே’ படத்தில் பயன்படுத்திய இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க ேவண்டும். நடிகை வாணி போஜனவை கேட்டு போன் செய்யும் பிரச்னையில் இருந்து விடுவிக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.


Tags : cellphone number heroine ,Inspector , Oh my God, cellphone number heroine, Commissioner's office, real estate tycoon
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு