×

கேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல்: பிற மாநிலங்களில் கோழிக்குஞ்சுகள், முட்டைகள் வாங்க அனுமதி பெற வேண்டும்...தமிழக அரசு அறிக்கை

சென்னை: சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பலர், கொரோனா தொற்றுடன் வருவதால், இங்கு சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கையும் 56  ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 19 பேர், கேரளாவில் 12 பேர், உத்தரப் பிரதேசத்தில் 9 பேரும் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  ராஜஸ்தான், மராட்டியம், லடாக் யூனியன் பிரதேசத்தில் தலா 2 பேர், கர்நாடகாவில் 4 பேர்,தெலுங்கானா, தமிழ்நாடு, காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவர் ஆவர். இந்த 56 பேரின் உறவினர்களுக்கும் ரத்த மாதிரி  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களில் சந்தேகப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை 12 மாநில அரசுகளும், மத்திய அரசும் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் கொரோனா வைரஸ்  பாதிப்புக்கு இறக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் வதந்தி காரணமாக இறைச்சி கோழிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இவற்றால் கொரோனா வைரஸ் பரவுவதாகவும் வதந்திகள் பரவி வந்தன. பறவைக்காய்ச்சல் கேரள மாநிலத்தில்  இருந்து வரும் நிலையில், கேரள மாநிலத்தின் எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களான கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை  முடிவில், தமிழக கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது.

அதில், பிற மாநிலங்களில் இருந்து கோழிக்குஞ்சுகள், முட்டைகள் வாங்க உரிய அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்களிடம் சான்றிதழ் பெற்றப் பின்பு தான் கோழிக்குஞ்சுகள், முட்டைகள் வாங்க வேண்டும்  என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் இருந்து தமிழகம் கொண்டுவரப்படும் கோழிகள் மற்றும் கோழிகள் இன சேர்ந்த பொருட்கள் அனைத்தும் தமிழக எல்லைக்குள் அனுமதிக்காதப்படி திருப்பி அனுப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நுழையும் பிற வாகனங்கள் கிருமினாசி மூலம் சுத்தம் செய்யப்பட்டு தமிழகத்திற்கு நோய் பரவாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகளிலும் தீவிர உயிர்ப்பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Kerala ,Chhattisgarh ,states , Bird flu spreads in Kerala: Chhattisgarh and other states get permission to buy eggs
× RELATED நாடு முழுவதும் 2ம் கட்ட மக்களவைத்...