×

அணுமின் நிலைய விரிவாக்கத்திற்காக கூடங்குளம் கடலில் யானைக்கல் பாறையை அகற்றக்கூடாது: பொதுமக்கள் வலியுறுத்தல்

ராதாபுரம: அணுமின்நிலைய விரிவாக்கத்திற்காக கூடங்குளம் கடல் பகுதியில் அமைந்துள்ள யானைக்கல் பாறையை அகற்றக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடங்குளம் கடலில் அமைந்தள்ள யானை கல்பாறை புராதனமிக்கது. பல்லாண்டு காலமாக அப்பகுதி மக்கள் கூடங்குளம் சந்தனமாதா ஆலய திருவிழாவின் 8ம் நாள் விழாவில் கடற்பகுதியில் அமைந்துள்ள யானைகல் பாறையை பார்த்து வருவதும் அதனை புனிதமாக கருதுவதும் பாரம்பரியமாக கருதப்படுகிறது. தற்போது அணுஉலைப்பூங்கா அமைய உள்ளதால் கடல்பகுதிகளில் இருந்து யானைக்கல் பாறை அகற்றப்பட்டு விடுமோ? என பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.மேலும் காலம் காலமாக மக்களிடைய தொடர்ந்து வரும் இந்த வழக்கத்திற்கான அனுமதியை அணுமின் நிர்வாகம் தற்போது ரத்து செய்து விட்டதாகவும் கூடங்குளம் வளர்ச்சி குழு குற்றம்சாட்டுகிறது.

ஆசியாவிலேயே மிக அழகான கடற்கரைகளில் ஒன்றாக கருதப்படும் தென்னகமெரினா என அழைக்கபடும் கூடங்குளம்-செட்டிகுளம் பிரதான கடற்கரையை மேலும் அழகுபடுத்தவும் அதன்பாரம்பரியத்தை காக்கவேண்டும் என சமுகஆர்வலர்கள் விரும்புகின்றனர். அணுஉலைவிரிவாக்க வரைபடத்தில் இருந்து தென்னக மெரினா கடற்கரையை காப்பாற்ற யானைக்கல் பாறையை அகற்ற கூடாது என்பது கூடங்குளம், செட்டிகுளம் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : facility ,Kudankulam Sea ,nuclear power station ,sea ,Koodankulam , Nuclear Station, Koodankulam, Elephant Rock, Public
× RELATED கழிவுநீர் கால்வாய் அடைப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்