×

கட்சியில் இருந்தால் மன்னர்; இல்லாவிட்டால் மாபியாவா?: ம.பி. காங். அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சிக்கவில்லை...சிவராஜ் சிங் சவுகான் பேட்டி

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை என முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

ம.பி. சட்டப்பேரவை தேர்தல்:

மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களில் வெற்றி பெற்றதைத்  தொடர்ந்து கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. பாஜ.வுக்கு 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். முதல்வர் வேட்பாளர் சிந்தியாவை நிறுத்த பல  எம்எல்ஏக்களும் விரும்பினர். ஆனால், சீனியர் தலைவர் என்பதால் கமல்நாத்துக்கு மீண்டும் முதல்வர் பதவியை மேலிடம் அளித்தது. இதனால் சிந்தியா  அதிருப்தி அடைந்தார்.

ம.பி அரசியலில் குழப்பம்:


இதற்கிடையே, சில நாட்களுக்கு முன்பு கமல்நாத் ஆட்சிக்கு சிக்கல் ஆரம்பித்தது. கமல்நாத் அரசுக்கு ஆதரவளித்த பிற கட்சி மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள்  திடீரென மாயமாயினர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சில் பாஜ ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதை பா.ஜ மறுத்தது. எனினும்,  மாயமான எம்எல்ஏக்கள் சிலர் போபால் திரும்பினர்.

ஜோதிர் ஆதித்ய சிந்தியா விலகல்:

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் முக்கிய பொறுப்பு தராததால் அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்ய  சிந்தியா உள்பட அவரின் ஆதரவாளர்களான 19 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 6 அமைச்சர்கள் உள்பட 19 காங்கிரஸ்  எம்.எல்.ஏக்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளனர். இதையடுத்து காங்கிரசின் பலம் 95 ஆக குறைந்துள்ளது. 107 சட்டமன்ற  உறுப்பினர்கள் கொண்ட பாஜக மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது.

சிவராஜ் சிங் சவுகான் பேட்டி:

மத்தியப் பிரதேசத்தில் அரசியல் திருப்பம் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மாநில முதல்வருமான சிவராஜ் சிங்  சவுகான், இது காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரம். இதுபற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை. காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக  ஈடுபடவில்லை. அதேசமயம் இந்த அரசு நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.  இதனை தீர்க்க வேண்டியது அந்த கட்சி தான். முதல்வர் கமல்நாத்தின் தலைமைக்கு எதிராக அக்கட்சியில் ஒரு பிரிவினர் அணிதிரள்கின்றனர் என்று  தெரிவித்தார்.

ஜோதிராதித்ய சிந்தியா விலகல் குறித்து கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் மாதவராவ் சிந்தியாவின் குடும்ப பின்னணியே துரோக  பின்னணி தான். 1857-ம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போர் நடந்தபோது ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக சிந்தியாவின் மன்னர் குடும்பம் செயல்பட்டது.  அதுபோலவே 1967-ம் ஆண்டு ஜோதிராதித்ய சிந்தியாவின் பாட்டி விஜயராஜே சிந்தியா காங்கிரஸில் இருந்து வெளியேறி ஜனசங்கத்தில் சேர்ந்தார். இதனை தான்  ஜோதிராதித்ய சிந்தியாவும் செய்துள்ளார் எனக் கூறினார்.

இதற்கு பதிலளித்த சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வரையில் ஜோதிராதித்ய சிந்தியாவை மன்னர் என வர்ணித்தார்கள். இப்போது அவர்  மாபியா ஆகி விட்டாரா? என கேள்வி எழுப்பினார்.

Tags : party ,Mafia ,state ,BJP ,King ,The Party , The king if in the party; If not the Mafia ?: MP Cong. BJP is not trying to topple the state ...
× RELATED மக்களவை தேர்தலில் படுதோல்வியை...