×

கறம்பக்குடி பகுதி அக்னி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல்

கறம்பக்குடி: கறம்பக்குடி பகுதியில் அனுமதி இன்றி மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது. கறம்பக்குடி பகுதி முழுவதும் அக்னி ஆற்றில் அனுமதி இன்றி மணல் அள்ளி கொண்டு வருவதாக கறம்பக்குடி தாசில்தார் சேக் அப்துல்லாவிற்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று காலை தாசில்தார் தலைமையில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது கறம்பக்குடி தென் நகர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் அனுமதி இன்றி அக்னி ஆற்றில் தனது மாட்டு வண்டியில் மணல் அள்ளிக்கொண்டு தென் நகர் பகுதியில் வரும் போது அவரை மடக்கி பிடித்து தாசில்தார் சேக் அப்துல்லா மாட்டு வண்டியை மணலுடன் கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் .இது குறித்து அனுமதி இன்றி மணல் அள்ளிய தங்கராஜ் மீது கறம்பக்குடி எஸ்ஐ அன்பழகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : area ,Karambakkudi ,river ,Agni , Sand
× RELATED திருப்புவனம் பகுதியில் மூலிகை வேர்கள் சேகரிக்கும் பணியில் தொழிலாளர்கள்