×

ஒலிம்பிக்கில் இடம்பெறப்போகும் 5 விளையாட்டுகள்

நன்றி குங்குமம் முத்தாரம்

2020 -ஒலிம்பிக்ஸ் மிக பிரமாண்டமாக ஜப்பானில் நடக்கவிருக்கிறது. பொதுவாக ஒவ்வொரு  ஒலிம்பிக்ஸின் போதும் சில விளையாட்டுகள் கழற்றிவிடப்படும்; புதிதாக சில விளையாட்டுகள் சேர்க்கப்படும். அந்த வகையில்  புதிதாக  ஐந்து விளையாட்டுகள் இந்த வருட ஒலிம்பிக்ஸில் இடம் பிடித்துள்ளன. அதுபற்றி பார்ப்போம்.

ஸ்கேட் போர்டிங்  

இது தெருவில் விளையாடப்படும் ஏற்ற இறக்கங்களுடன் கூடிய ஒரு விளையாட்டு. இதற்கு உலகளவில் இப்போது பெரும் மவுசு. குறிப்பாக சிறுசுகள் இதில் பல சாதனைகள் புரிந்து வருகின்றனர்.  ஸ்கைப்ரௌன் என்ற ஜப்பானிய இளம் பெண் (11 வயது) இதில் பல சாதனைகள் புரிவாள் என்று எதிர்பார்க்கப்படுகிறாள். ஆனால், ஸ்கைப் பிரிட்டன் சார்பாக பங்கேற்க உள்ளார்.

இவருடன் மோதுபவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜப்பானின் உலக சேம்பியன் மிசுகுஒகாமோடோ (வயது 13); பெண்கள் பிரிவு ஸ்கேட் போர்டிங்கில் இவர்கள் இருவரிடையே கடும் போட்டியை எதிர்பார்க்கலாம். ஆண்கள் பிரிவில் ஓட்டுப்போடும் வயதில் ஒரு இளைஞர், அமெரிக்காவின் நான்கு முறை சேம்பியன் நிஜாக் ஹுஸ்டனைச் சந்திக்கப் போகிறார். இதுதான் முதல் ஸ்கேட் போர்டிங் தங்கம். அதனால் தங்கத்தைத் தட்ட கடும் போட்டி இருக்கும் என நம்பலாம். இருந்தாலும் நிஜாக்குக்கு வாய்ப்பு அதிகமாம்!   

ஷர்பிங்  

ஜப்பானின் டிசூரிகசாக்கி கடற்கரையை ஒட்டிய அலை களில் நடக்கப்போகும் போட்டியைக் காண இப்பவே ஜப்பானியர்களிடம் கடும் போட்டியாம். ஹானலூலுவில் பிறந்த ஜான்ஜான் பிளோரன்ஸ் மற்றும் பிரேசிலியன் ஜோடி இடாக் லா பெர்ரைரா மற்றும் கேபிரில் மெடினா ஆகியோர் மோதுகின்றனர். ஆண்களிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள் போட்டியில் அமெரிக்காவின் காரிஸ்ஸாமூர் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஏழுமுறை உலக சேம்பியன் ஸ்டிபனிக் கில் மோர் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவும். ஷர்பிங்கை ஒரு விளையாட்டு என்பதைவிட, அதுதான் வாழ்க்கை என பேசுபவர்கள் இந்தப் பகுதியில் அதிகம்.
 
ஸ்போர்ட் கிளைம்பிங்  


செக் குடியரசின் நம்பிக்கை நட்சத்திரம் ஆடம் ஓன் டிரா. ஆறு வயதிலேயே மலை ஏற ஆரம்பித்தவர்... இதனால், கரடு, முரடான அல்லது எத்தகைய மலையாக இருந்தாலும் இவருக்கு சுலபம். இவர் கனடாவின் சீன் மைக்கேல்  மற்றும் ஆஸ்திரியாவின் ஜாக்கோப் ஸ்சூபெர்ட் மற்றும் லோக்கல் வீரரானலிடோமா நாராசாகி ஆகியோரை சந்தித்து வெற்றி கொள்ள வேண்டும். ஸ்லோவேனியா நாட்டின் ஜன்ஜா கான் ப்ரெட் மற்றும் ஜப்பானிய மிக்க அனுபவம் கொண்ட அகியோநொகூச்சி ஆகியோர் பெண்கள் பிரிவில் எதிர்கொள்ளப் போகின்றனர். அனுபவமா? இளமையா? யாருக்கு வெற்றி...? பொறுத் திருப்போம்!  

கராத்தே

ஒலிம்பிக்கில் மிகக் குறுகிய காலமே இதற்கு அனுமதி! ஆமாம் 2024 ஒலிம்பிக் (பாரீஸ்) போட்டியில் கராத்தேக்கு இடம் இல்லை என இப்பவே அறிவித்து விட்டனர்!ஒகினாவின் உள்ளூர் நபர் ரியோ கியூனா, இதில் தங்கத்தை அள்ளத்துடிக்கிறார். இரானியன் ஜுடோகா மற்றும் முன்னாள் உலக சேம்பி யன் சையத் மோலாயி (தற்போது மங்கோலியர்) இடையே தான் கடும் போட்டி. ஜப்பானியர்கள் கூர்ந்து பார்க்கும் போட்டி!
 
பேஸ்பால் மற்றும் சாஃப்ட் பால்.

2008 பீஜிங் ஒலிம்பிக்குடன், பேஸ் பாலுக்கு குட்பை சொல்லப்பட்டது. ஆனால், தற்போது 2020 ஒலிம்பிக்கில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.  
உலக பேஸ்பால் போட்டி களில் 2006 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் வென்ற பெருமை ஜப்பானுக்கு உண்டு. ஜப்பானின் ஷோகீஸ் ஒக்டானியின் துடிப்பான ஆட்டம், கடும் போட்டியைத் தரும் என நம்பலாம். கூடுதலாக  ஜப்பானிலேயே ஒலிம்பிக் நடப்பதால், ஒரு கை பார்க்க ஜப்பான் ரெடி. ஆனால், இந்த ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் கியூபாதான் அண்ணன்கள் . மேலும் டொமினிக்கன் ரிபப்ளிக்கும் சேர்ந்துள்ளதால், பதக்கம் வாங்குவது எளிதல்ல! ஒலிம்பிக்கில் பேஸ்பால் 5 முறை இடம் பெற்றுள்ளது. இதில் 4 முறை அமெரிக்கா சாம்பியன்!

Tags : games ,Olympics ,place , The Olympics are going to be huge in Japan.
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...