×

மன்னார்குடி முதல் நீடாமங்கலம் வரை நெடுஞ்சாலையோரம் நடப்பட்ட மரப்போத்துகளுக்கு தண்ணீர் சப்ளை

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இயங்கி வரும் கிரீன் நீடா சுற்றுச் சூழல் அமைப்பு. கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி உலக மாணவர்கள் தினத் தன்று மன்னார்குடி முதல் நீடாமங்கலம் வரை மாநில நெடுஞ்சாலையில் சுமார் 12கி.மீ தொலைவிற்கு ஆலம், ஒதியம், வாதாமடக்கி உள்ளிட்ட மரப்போத்துகளை நட்டனர். இப்பணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். நடப்பட்டுள்ள மரப்போத்துக்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவைகள் செழி ப்பாக வளர்ந்து வருகிறது. இம் மரப்போத்துகளுக்கு ஞாயிறுதோறும் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் ஊற்றும் பணியில் கிரீன் நீடா சுற்றுச் சூழல் அமைப்பின் தன்னார்வ தொண்டர்கள் ஈடுப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு கூறுகையில், தற்போது வரும் கோடைக்காலத்தில், வழக்கத்தைவிட வெப்ப தாக்கம் அதிக மாக இருக்கும் என்றும், வெப்ப அலைகள் வீசும் என வானிலை ஆய்வு மை யம் எச்சரித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது போன்றே மார்ச் மாதம் தொடக்கத்திலேயை கடும் வெயில் வாட்டி எடுக்கிறது. இதில் நாங்கள் நட்ட மரப்போத்துக்கள் நட்டு நான்கு மாதமே ஆன நிலையில் இந்த கடுமையான வெயில் தாக்கத்திலிருந்து காக்கவே ஞாயிற்றுக்கிழமை தோறும் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் ஊற்றிட முடிவு செய்து மார்ச் மாதம் 1ந் தேதி முதல் தண்ணீர் ஊற்றி வருகிறோம். நாங்கள் வைத்த மரங்கள் அனைத்தும் காப்பாற்ற பட்டால் இச்சாலை விரைவில் பசுமையான சாலையாக மாறும் என்றார்.

Tags : Water Supply ,Carpenters ,Highway Water , Water
× RELATED பெங்களூருவில் காவிரி நீரை அவசியமற்ற...