×

வாளையார் அருகே 24 காட்டுப்பன்றிகள் ரயிலில் அடிபட்டு பலி

பாலக்காடு: கேரள-தமிழக எல்லையான வாளையார் அருகே தண்டவாளத்தை கடந்த காட்டுப்பன்றிகள் கூட்டத்தின் மீது ரயில் மோதியதில் 24 பன்றிகள் ஒரே நேரத்தில் உயிரிழந்தன. கேரள-தமிழக எல்லை வாளையார் ரயில் நிலையம் அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளது. யானைகள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் அடிக்கடி தண்டவாளத்தை கடக்க முற்படும் யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பது வழக்கம். இதையடுத்து வன உயிரின ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று இப்பகுதியில் இரவு நேரத்தில் இயங்கக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டது. இருப்பினும் இரை, தண்ணீர் தேடி தண்டவாளத்தை கடக்கின்ற யானைகள் அவ்வப்போது விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று பாலக்காட்டிலிருந்து கோவை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் தண்டவாளத்தை கூட்டமாக கடந்த காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து ரயிலின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தன. இதை கண்ட கேட் கீப்பர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் விரைந்து வந்து தண்டவாளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்த பன்றிகளை ஒவ்வொன்றாக எடுத்து தண்டவாளத்தின் அருகே குவித்தனர். மொத்தம் 24 பன்றிகள் ஒரே நேரத்தில் ரயிலில் சிக்கி உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Hogs
× RELATED ஜெயக்குமார் மரணத்தில் நிறைய...