×

குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் மட்டும் பாதிக்கப்பட போவதில்லை: ஏழைகளும் பாதிக்கப்படுவார்கள்: சிஏஏ எதிர்ப்பாளர்கள் கூட்டாக பேட்டி

சென்னை: சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் மட்டும் பாதிக்கப்பட போவதில்லை ஏழைகளும் பாதிக்கப்படுவார்கள் என சிஏஏ எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கேரளா, ராஜஸ்தான், புதுவை உள்பட 13 மாநிலங்களில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதேபோல் தமிழகத்தில் இச்சட்டங்களை அமல்படுத்த மாட்டோமென சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், இச்சட்டம் தொடர்பாக நடந்த சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் தர்ணா, மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்கள் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது; சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் மட்டும் பாதிக்கப்பட போவதில்லை. சிஏஏ சட்டத்தால் ஏழைகளும் பாதிக்கப்படுவார்கள். மக்களிடையே வெறுப்புணர்வை விதைத்தால் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். சிஏஏவை தனித்து அணுக முடியாது. மக்கள்தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேட்டுடன் இணைத்தே சி.ஏ.ஏ. சட்டத்தை பார்க்க வேண்டும். சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி., ஆகியவை அரசியல் சட்டத்துக்கு எதிரானது. ஜனநாயகத்தில் மக்கள் குரலை அரசு கேட்க வேண்டும்.  சி.ஏ.ஏ.வை ஏற்க முடியாது என்று 13 மாநிலங்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டன. இன்று நாட்டில் வெறுப்புணர்வை ஏற்படுத்தி விட்டனர். தமிழ் மக்களின் குரலை தமிழக அரசு கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Islamists ,CAA ,poor ,opponents ,Muslims , Islamists, poor, CAA opponents
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்