×

சத்தியமங்கலத்தில் பவானீஸ்வரர் கோயிலில் கட்டுமான பணியின் போது, சுற்றுச்சுவர் இடிந்து ஆற்றில் விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி

ஈரோடு : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பவானீஸ்வரர் கோயிலில் கட்டுமான பணியின் போது, சுற்றுச்சுவர் இடிந்து ஆற்றில் விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பவானி ஆற்றின் கரையோரம் உள்ள ஈஸ்வரன் கோயிலில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காலை கோயில் திறக்கப்பட்டதும் பக்தர்கள் உள்ளே வந்து கொண்டிருந்தனர். அப்போது கோயிலின் பின்புறத்தில் உள்ள சுற்றுச்சுவர் பயங்கர சத்தத்துடன் இடிந்து ஆற்றில் விழுந்தது. இது கோயில் வளாகத்தில் இருந்த 63 நாயன்மார்கள் சிலைகளும் இடுப்பாடுகளுக்குள் சிக்கி உடைந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் தப்பி ஓடினர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோயிலில் 150 நீள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவர் அமைப்பதற்காக தரைத்தளத்தில் இருந்து 100 அடி ஆழத்தில் பவானி ஆற்றில் கான்க்ரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டு இருந்தது. இந்தநிலையில் ஆற்றின் பக்கம் உள்ள கோயிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் பக்தர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர்.இதனிடையே  சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் பவானீஸ்வரர் கோயிலின் நடை சாத்தப்பட்டது.


Tags : construction work ,Bhavaniswarar Temple ,devotees ,Sathyamangalam ,collapse ,river , Erode, Pavaneswarar, Temple, Circuit, Devotees
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி