×

இத்தாலியில் 463 பேரை காவு வாங்கிய கொரோனா : வைரஸ் பரவலை தடுக்க இத்தாலி மக்கள் பயணம் செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு

ரோம் : கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து இத்தாலி முழுவதும் அந்நாட்டு அரசு அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளது . மக்கள் பயணம் செய்வதற்கு நாடு முழுவதும் இத்தாலி அரசு கட்டுப்பாட்டை விதித்துள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் இத்தாலியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூடப்படுவதாக இத்தாலி பிரதமர் கிஸ்ஸேப்பே அறிவித்துள்ளார்.

இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 463-ஆக உயர்வு

கொரோனா வைரஸால் சீனாவுக்கு அடுத்த இத்தாலியில் தான் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,807 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9,172 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 463-ஆக உயா்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி முழுவதும் மூடப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 3ம் தேதி வரை உத்தரவு அமல்

மக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும்படியும் பயணங்களை தவிர்க்கும் மாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே வெனிஸ் உள்ளிட்ட சில நகரங்களில் விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகள், தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளன. பணிநிமிர்த்தமாகவோ, மருத்துவ காரணங்களுக்காகவோ அல்லது அத்திவசியதேவைகளோ இல்லாமல் வெளியில் பயணிக்க வேண்டாம் என்றும் இத்தாலியில் 6 கோடி மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ஏப்ரல் 3ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் குவிந்தனர்.

கொரோனா வைரஸ்க்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது

இதனிடையே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 1,10,000  ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3,994 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3,949 பேர் சீனாவை தவிர மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சைப்ரஸ் மற்றும் பர்கினா ஃபேஸோவில் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஜெர்மனி மற்றும் கனடா நாடுகளில் கொரோனாவிற்கு முதல் உயிரிழப்பு பதிவாகி உள்ளது. ஈரானில் 237, தென்கொரியாவில் 54, ஸ்பெயினில் 28, அமெரிக்காவில் 24, பிரான்ஸில் 21 பேர் என கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்க்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.


Tags : Corona ,Italy Corona ,population , Italy, South Korea, USA, Corona, Virus, India
× RELATED பெரும் தொழிலதிபர்களுக்கு கடன்...