×

தொடர்ந்து 6-வது நாளாக குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

சென்னை: கச்சா எண்ணை விலை தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து பெட்ரோல், டீசல் விலை 6 வது நாளாக குறைந்து வருகிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய காரணிகளால் கடந்த சில மாதங்களாக பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலை வெகுவாக உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அவற்றின் விலையில் வீழ்ச்சி காணப்படுகிறது. இதற்கு கொரோனா வைரஸ் தாக்குதல் பெரிய காரணமாக கூறப்படுகிறது. அதனால் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வள நாடுகளின் அமைப்பு வலியுறுத்தி இருந்தது.

ஆனால் இதற்கு ரஷியா மறுப்பு தெரிவித்தது. இதனால் சவுதி அரேபியா அதிரடி முடிவை எடுத்தது. அதாவது, கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, வெளிநாடுகளுக்கு சலுகை விலையில் வழங்கப்படும் என அறிவித்தது. இப்படியான உரசலாலும், ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்குதலால் உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்து வருவதாலும் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கச்சா எண்ணெய் விலை பெருமளவில் குறைந்து வந்தாலும், பெட்ரோல், டீசல் விலை பைசா கணக்கிலே குறைந்து வருகிறது.

இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 31காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.73.02 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 27 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.66.48ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பிப்.29 முதல் மார்ச் 10 வரை பெட்ரோல் ரூ.1.35 காசுகளும், டீசல் ரூ.1.37 காசுகளும் குறைந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : motorists , Motorists, gasoline and diesel prices
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...