×

அடக்கம் செய்ய பணம் இல்லாததால் தாயின் சடலத்தை ஓடையில் வீசிச்சென்ற மகன் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே பாலா பகுதியைச் சேர்ந்தவர் அம்முக்குட்டி (76). கணவரை இழந்த இவருக்கு அலெக்ஸ் பேபி (46) உள்பட 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இதற்கிடையே, தந்தை பெயரில் மாவேலிக்கரையில் இருந்த 10 சென்ட் நிலத்தை அலெக்ஸ் பேபி ரூ.60 லட்சத்துக்கு விற்றார். பின்னர் தாய் அம்முக்குட்டியுடன் பாலாவில் உள்ள ஒரு லாட்ஜில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி அம்முக்குட்டி லாட்ஜில் இறந்தார். அவரது உடலை தனது காரில் அலெக்ஸ் பேபி ஏற்றியுள்ளார்.

பல இடங்களில் காரில் சுற்றித்திரிந்து பின்னர் பாலாவில் உள்ள தனியார் மருத்துவமனையின் எதிரே உள்ள ஓடையில் வீசியுள்ளார். மறுநாள் காலை அந்த உடலை பார்த்தவர்கள் பாலா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்தபோது, ஒருவர் காரில் வந்து சடலத்தை வீசி சென்றது தெரியவந்தது. மேலும் கார் பதிவெண்ணும் அதில் தெளிவாக தெரிந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி அலெக்ஸ் பேபியை கைது செய்தனர். விசாரணையில் அடக்கம் செய்ய பணம் இல்லாததால் தாயின் உடலை ஓடையில் வீசியதாக தெரிவித்தார்.

Tags : stream ,Bury , Burial, money, mother's body, stream, son arrested
× RELATED விமானத்தில் பயணம் செய்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள்