×

வீட்டுக் காவலில் இருக்கும் முன்னாள் முதல்வர்களை விடுவியுங்கள்: எதிர்க்கட்சிகள் கூட்டு அறிக்கை

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளன. காஷ்மீர் எதிர்க்கட்சியினர் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜனநாயகத்தின் விதிகள், அடிப்படை உரிமைகள், பொது சுதந்திரத்தின் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, கருத்து வேறுபாடு கட்டுப்படுத்தப்படுவதுடன் இல்லாமல், இதற்கு எதிராக எழும் விமர்சனங்களின் குரலும் ஒடுக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர்கள் மூன்று பேர், கடந்த 7 மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதே இதனை அப்பட்டமாக விளக்குவதற்கு போதுமானது. மோடி அரசு தவறான விளக்கம் அளித்திருப்பது போன்று, இவர்கள் தங்களது கடந்தக்கால நடவடிக்கையினால் நாட்டின் நலனுக்கு ஆபத்து விளைவித்ததற்கு ஆதாரம் எதுவுமில்லை. இவ்வாறு கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : chiefs ,parties ,Opposition , House arrest, former chiefs, acquitters, opposition parties, joint statement
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...