×

தங்கம் விலையில் திடீர் மாற்றம் சவரனுக்கு ரூ.208 குறைந்தது

சென்னை: தங்கம் நேற்று திடீரென சவரனுக்கு ரூ.208 குறைந்தது. தங்கம் விலை கடந்த 2 மாதமாக உயர்ந்து வந்தது. இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் உயர்ந்தது. மார்ச் 2ம் தேதி ஒரு சவரன் ரூ.32,040, 3ம் தேதி ரூ.32,300, 4ம் தேதி ரூ.33,024, 5ம் தேதி ரூ.32,976க்கும், 6ம் தேதி ரூ.33,760க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற வரலாற்று சாதனையை படைத்தது. 7ம் தேதி ஒரு சவரன் ரூ.33,656க்கு விற்கப்பட்டது. 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டு விடுமுறை நாளாகும்.

இதனால், சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. இந்த நிலையில் ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. இதில் தங்கம் விலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.26 குறைந்து ஒரு கிராம் ரூ.4,181க்கும், சவரனுக்கு ரூ.208 குறைந்து ஒரு சவரன் ரூ.33,488க்கும் விற்கப்பட்டது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தால் அதிகப்படியாக உயர்வதும், குறைந்தால் மட்டும் சிறிதளவு குறைவது என்பது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Tags : change ,Rs , Gold price, change, shaving, down Rs 208
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு