×

ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கல் விழா லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்தனர்

திருவனந்தபுரம்: கேரளாவின் பிரசித்திப் பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயிலில் நேற்று லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை  வழிபட்டனர். திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் ேகாயில் உலக புகழ்வாய்ந்தது. இந்த கோயிலில் ஒரே ேநரத்தில், ஒரே இடத்தில் பல  லட்சம் பெண்கள் பொங்கலிடும் நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கோயிலில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த  1ம் தேதி தொடங்கியது. 9ம் நாளான நேற்று பொங்கல் வழிபாடு நடந்தது. காலை 10.30 மணிக்கு கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பண்டார  அடுப்பில் ேமல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி தீ மூட்டினார்.

அதன் பிறகு திருவனந்தபுரம் கிழக்கே கோட்டை, தம்பானூர், கிள்ளிப்பாலம், வெள்ளையம்பலம் உள்பட கோயிலில் இருந்து சுமார் 10 கிமீ சுற்றளவில்  லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். பிற்பகல் 2.15 மணியளவில் ெபாங்கல் நைவேத்தியம் நடந்தது. இதற்காக  250 புரோகிதர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். குட்டி விமானத்தின் மூலம் வானில் இருந்து பூ தூவப்பட்டது. அதன் பிறகு பக்தர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். கொரோனா பீதியால் பலர் முக கவசம் அணிந்து ெபாங்கலிட்டனர்.இன்று இரவு காப்பு அவிழ்த்து குருதி பூஜையுடன் 10 நாட்கள் நடந்த திருவிழா நிறைவடையும்.

வெளிநாட்டினருக்கு புதிய கட்டுப்பாடு
இந்த பொங்கலில் அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து உள்பட பல வெளிநாடுகளை  சேர்ந்தவர்கள் பங்கேற்பதுண்டு. இந்த ஆண்டும் ஏராளமான  வெளிநாட்டினர்  பொங்கலிட வந்துள்ளனர். இவர்கள் யாரும் பொதுமக்கள் கூடும் இடங்களில்  பொங்கலிட வேண்டாம் எனவும், அவர்கள் தங்கியுள்ள  ஓட்டல்களில் பொங்கலிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

Tags : Pongal Festival ,Bhagavathyamman Temple ,River The River , Pongal , Bhagavathyamman, Temple ,River
× RELATED உலகப்புகழ்பெற்ற ஆற்றுக்கால் பொங்கல்...