×

மனைவியை மோசடி வழக்கில் சிறையில் தள்ளிய ஐபிஎஸ் மீது வழக்கு

லக்னோ: மனைவியை மோசடி வழக்கில் சிக்கவைத்து சிறைக்குள் தள்ளிய லக்னோ ஐபிஎஸ் போலீஸ் அதிகாரி மீது உத்தரப் பிரதேச போலீசார்  வழக்கு பதிவு செய்துள்ளனர்.உத்தரப் பிரதேச காவல்துறையில் ‘சிங்கம்’ என்று அழைக்கப்படும் ஐபிஎஸ் மூத்த அதிகாரி அஜல் பால் சர்மா, உன்னாவில் உள்ள போலீஸ் பயிற்சி  மையத்தின் தலைவராக உள்ளார். ‘என்கவுன்டர்’ ஸ்பெஷலிஸ்ட் என்று பாராட்டப்படுபவர். இவரது கைவரிசையால், 9 என்கவுன்டர் மரணங்கள்  நடந்துள்ளன. சுமார் 190 குற்றவாளிகள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.சர்மா காஜியாபாத்தில் ேபாலீஸ் அதிகாரியாக இருந்தபோது, 2016ல் தீப்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இருவருக்குள்ளும் கருத்து  வேறுபாடு உள்ள நிலையில், தீப்தி திடீரென உள்துறை அமைச்சகத்துக்கு தன் கணவர் மீது புகார் ஒன்றை அனுப்பினார்.

அதில், ‘கணவர் சர்மா என்னை ஒரு மோசடி வழக்கில் 2019 ஜூலையில் சிக்கவைத்து சிறைக்கு அனுப்பினார். எனது மடிக்கணினி மற்றும் பிற  பொருட்களை அவரது உதவியாளர்கள் துணையுடன் அள்ளிச் சென்றார். எங்களது திருமணத்தின்போது எடுக்கப்பட்ட போட்டோ மற்றும் கேசெட்களை  எடுத்துச் சென்று ஆதாரங்களை அழித்தார். மோசடி வழக்கை விசாரித்த போலீசார், சர்மாவின் உத்தரவின்பேரில் எனது மொபைல் போன்களை  பறித்தனர். இதனால் சர்மாவுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் இழந்தேன். என் கணவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று  தெரிவித்து இருந்தார்.இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி, சர்மா மீது நடவடிக்கை எடுக்க மாநில காவல் துறை  அதிகாரிக்கு உத்தரவிட்டது.

அதையடுத்து, அஜல் பால் ஷர்மா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகாரத்தை தவறாகப்  பயன்படுத்துதல், ஆதாரங்களை அழித்தல், குற்றவியல் நம்பிக்கையை மீறுதல் போன்றவற்றின்படி எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.இவருடன், ஒரு சில ஜூனியர் போலீசாரின் ெபயரும் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளது. மனைவி கொடுத்த புகாரில் ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்கு  பதிவு செய்யப்பட்ட சம்பவம், உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : IPS , spouse ,cheating, jail, Case ,IPS
× RELATED போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தவறான...