×

தேர்தலுக்கு கட்சிகள் செலவிடும் தொகையை நிர்ணயிக்க பரிந்துரை

புதுடெல்லி: எம்எல்ஏ, எம்பி.க்களுக்கு போல, தேர்தலின்போது அரசியல் கட்சிகள் செலவிடும் தொகையையும் நிர்ணயிக்க வேண்டும் என்று தேர்தல்  ஆணையத்தின் செயற்குழு பரிந்துரைத்துள்ளது. மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலின்போது எவ்வளவு தொகை செலவிட வேண்டும் என்ற வரையறை  உள்ளது. அதேபோன்று, ஒரு கட்சி எத்தனை வேட்பாளர்களை நிறுத்துகிறதோ அதில் உச்சபட்ச செலவு வரம்பில் பாதியை மட்டுமே செலவிட  வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் மேலாண்மை குறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் கடந்தாண்டு பல்வேறு செயற்குழுக்களை அமைத்தது. அந்த அமைப்புகள் நடத்திய ஆய்வின் முடிவில், அரசியல் கட்சிகளின் தேர்தலுக்கு செலவிடும் தொகையையும் வரையறுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் தேர்தல் செலவுகள் தொடர்பாக வேட்பாளர்கள், கட்சிகள் இடையே வெளிப்படைத் தன்மையை கொண்டு வர முடியும் என்று தேர்தல்  ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Tags : parties ,election , Parties,election,determining ,expenditure
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...