மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் மூச்சுத்திணறி பயணி சாவு

திருச்சி: மலேசியாவில் இருந்து திருச்சிக்கு நேற்று காலை தனியார் விமானம் வந்தது. இதில் 180 பயணிகள் இருந்தனர். கொரோனா பீதி காரணமாக அனைத்து பயணிகளுக்கும் முக கவசம் வழங்கப்பட்டது.   இதில் மலேசியா நாட்ைட சேர்ந்த சென்னையா (65) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்படுவதாக விமான பணிப்பெண்ணிடம் கூறினார். தொடர்ந்து அவருடைய முக கவசத்தை அகற்றி தலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. விமானம் திருச்சியில் தரையிறங்குவதற்கு முன் சென்னையா மூச்சு திணறலால் உயிரிழந்தார். விமானம் தரையிறங்கிய பின்னர், சென்னையா உடல் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்து பயணிகளும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories:

>