×

வாணியம்பாடி அருகே 6ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்: போக்சோவில் 3 பேர் கைது

வாணியம்பாடி:  6ம் வகுப்பு மாணவியை, போதை வாலிபர்கள் 3 பேர் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை இறந்துவிட்டதால் தாயுடன் சித்தி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி மாலை சிறுமி இயற்கை உபாதை கழிக்க வீட்டின் அருகே உள்ள வயல்வெளிக்கு சென்றார். அப்போது அங்கு மது அருந்திக்கொண்டிருந்த 3 வாலிபர்கள், சிறுமியை  கடத்தி, மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், ‘இந்த சம்பவத்தை யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவோம்’ என மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் தேடி அலைந்தனர். அப்போது தள்ளாடியபடி வந்த சிறுமி நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார். இதை கேட்டு அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிறுமியின் சித்தி வாணியம்பாடி போலீசில் புகார் அளித்தார். தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கண்ணன்(24), பார்த்தீபன்(26), சந்துரு(28) என தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்து, வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று சமூக பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும், கலெக்டர் சிவன்அருள் இதுகுறித்து அறிக்கை அளிக்குமாறு உதயேந்திரம் பஞ்சாயத்து செயல் அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார்.Tags : student ,Vaniyambadi , Vaniyambadi, 6th ,grade student, abducted,
× RELATED கிணற்றில் மூழ்கி மாணவன் பலி