×

கணக்கீட்டாளர் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம்

சென்னை: கணக்கீட்டாளர் மற்றும் இளநிலை உதவியாளர்/கணக்கு பதவிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கணக்கீட்டாளர் மற்றும் இளநிலை உதவியாளர்/கணக்கு பதவிகளுக்கான தேர்வு கணினி அடிப்டையிலான ஆங்கில மொழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களின் நலன் கருதி தமிழ் மொழியிலும் நடத்திட முடிவு செய்து கணினி வழியில் விண்ணப்பம் சமர்பிக்க கால அவகாசம் 23.03.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  மேலும் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையத்தை பார்க்கவும்’ எனக்கூறப்பட்டுள்ளது.Tags : Accountant Selection
× RELATED சென்னையில் பொதுத்தேர்வு எழுதும்...