×

பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்த உத்தரவு

சென்னை: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தமிழக அரசுப் பள்ளிகளில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பயோ மெட்ரிக் என்னும் தொட்டுணர் கருவி வருகைப் பதிவேட்டை 30ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி  வைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து  தற்காத்துக் கொள்ளுதல் தொடர்பான வழிப்புணர்வு பிரச்சாரம் நாடு முழுவதும் நடக்கிறது. இந்நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 31ம் தேதி வரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு வைக்கப்பட்டுள்ள தொட்டுணர்(பயோமெட்ரிக்) வருகைப் பதிவு முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். இது குறித்து அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்.

Tags : schools , Schools, biometric
× RELATED டெல்லியில் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு