×

மலையாக குவிந்து கிடக்கும் மண்; வைகை அணையின் கொள்ளளவு 6ல் ஒரு பங்காக குறைந்தது: மேகமலையில் நீரோடைகள் திசை மாறியதாலும் சிக்கல்

மதுரை: வைகை அணை நீர்த்தேக்க பகுதியில் மலை போல் குவிந்துள்ள மண், தூர்வாரப்படாமல் உள்ளதால், அணையின் கொள்ளளவு ஆறில் ஒரு பங்காக குறைந்து விட்டது. மேலும் மேகமலையில் உள்ள நீரோடைகளும் திசை மாறி ஓடுவதால், அணைக்கு நீர்வரத்தும் வெகுவாக குறைந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் உபரிநீரை தேக்கி வைக்கவும், மூல வைகையாற்றில் வரும் நீரை தேக்கி வைக்கவும் கடந்த 1958ம் ஆண்டு அப்போதைய மதுரை மாவட்டத்தின் ஆண்டிபட்டியில் வைகை அணை கட்டப்பட்டது. தற்போது ஆண்டிபட்டி மதுரையில் இருந்து பிரிக்கப்பட்ட தேனி மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது.  

பெரியாறு அணையின் உரிமையை மீட்க போராடி வரும் இந்த நேரத்தில், கைவசம் உள்ள வைகை அணை, முற்றிலும் பராமரிக்கப்படாமல் உள்ளது என்றும் அணையை தூர்வாருவதில் அரசு அலட்சியமாக உள்ளது என்றும் 5 மாவட்ட விவசாயிகள் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். வைகை அணையின் உயரம் 71 அடி. அணையில் 6,878 மில்லியன் கனஅடி நீர் தேக்க முடியும். நிலப்பரப்பில் அமைந்துள்ளதால் 62 ஆண்டுகளில், அணை நீர்த்தேக்க பகுதியில் ஏரளாமாக மண் படிந்துள்ளது. கடைசியாக நடத்திய ஆய்வின்படி 1,200  மில்லியன் டன் மண், 27 அடி உயரத்துக்கு மலை போல் குவிந்துள்ளது. இதனால் அணையின் நீர் கொள்ளளவு ஆறில் ஒரு பங்கு குறைந்துள்ளது.

அணையில் தற்போது 5,575 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் தேக்க முடிகிறது. 2 ஆண்டுகளுக்கு முன் அணையை தூர்வார ரூ.200 கோடியில் திட்டம் உருவாக்கப்பட்டது. இது தொடர்பாக சிங்கப்பூர் கம்பெனியுடன் பேச்சுவார்ததை நடந்தது. அதன் பின்னர் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஏற்கனவே அணையின் கொள்ளவு குறைந்து விட்ட நிலையில், தற்போது நீர்வரத்திலும் புதிய தடை உருவாகியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து

வறண்ட வைகை ஆறு
மதுரை நகரின் குடிநீர் ஆதாரமும் வைகை அணைதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வைகை ஆறும் வறண்டு கிடக்கிறது. தென் மாவட்டங்களில் 1,497 கண்மாய்களும், அதன் மூலம் பெருகும் நிலத்தடி நீரை நம்பி 65 ஆயிரம் பாசன கிணறுகளும் வைகையாற்றை நம்பி உள்ளன. வைகை அணையில் இருந்து  ராமநாதபுரம் வரை வைகை ஆற்றில் உள்ள 250 கி.மீ. தூரத்தில் 106 கூட்டு குடிநீர் ஆதார கிணறுகளும் முற்றிலும் வறண்டு விட்டன.

Tags : dam ,Vaigai ,streams ,Meghalaya ,Vaigai Dam , Vaigai Dam, Meghamalai, Streams
× RELATED மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு