×

தஞ்சை தனியார் கல்லூரியில் ரொமான்ஸ் மழையில் நனைந்த ஜோடி: பேராசிரியையுடன் பலமுறை உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய பேராசிரியருக்கு சிறை

தஞ்சை: தஞ்சை அருகே கல்லூரி பேராசிரியையை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தனது வீட்டுக்கே அழைத்து சென்று உல்லாசமாக இருந்துவிட்டு தற்போது மணமுடிக்க மறுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையிலடைக்கப்பட்டார். தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் அஸ்வின்ராஜ் (29). வல்லத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அதே கல்லூரியில் வல்லத்தை சேர்ந்த 29 வயதான பேராசிரியையும் கடந்த 2016ல் வேலைக்கு சேர்ந்தார். 2017ல் பேராசிரியை வேறு கல்லூரிக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

ஒரே கல்லூரியில் வேலை செய்தபோது பேராசிரியர் அஸ்வின்ராஜிடன் பேராசிரியைக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலானது. கல்லூரிக்கு வரும்போதும், கல்லூரி முடிந்து செல்லும் போது இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். பேராசிரியை வேறு கல்லூரிக்கு மாறிய பின்னரும் போன் மூலம் காதலை வளர்த்து வந்தனர். இவர்களிடையே நெருக்கம் அதிகமானதால் கல்லூரிக்கு வந்துசெல்லும்போது அஸ்வின்ராஜ் தனது பைக்கில் பேராசிரியையை அழைத்து சென்றுவந்தார். இதில் இருவரும் நெருங்கி பழகினர். இந்நிலையில் அஸ்வின்ராஜ் பேராசிரியை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது வீட்டுக்கே அழைத்து சென்று தனிமையில் பேசி வந்துள்ளார்.

அப்போது அஸ்வின்ராஜ், பேராசிரியையை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பல முறை உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பேராசிரியை அஸ்வின்ராஜிடம் கூறியுள்ளார். இதனால் அஸ்வின்ராஜ், விரைவில் வீட்டுக்கு பெண் கேட்டு வருவதாக காதலியிடம் கூறியுள்ளார். ஆனால் வரவில்லை. இதுபற்றி அவர் கேட்டபோது திருமணம் செய்ய முடியாது என மறுத்துள்ளார். மேலும் அஸ்வின்ராஜின் தந்தை செல்வராஜ், பேராசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பேராசிரியை வல்லம் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின்பேரில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து விட்டு தற்போது அஸ்வின்ராஜ் ஏமாற்றி விட்டதாக தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் பேராசிரியர் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அதில், அஸ்வின்ராஜின் அண்ணனும் காதல் திருமணம் செய்துகொண்டதுடன் தற்போது சொத்தில் பங்கு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இளைய மகனும் இதுபோல் காதல் வலையில் சிக்கியதால் அஸ்வின்ராஜின் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததும், பேராசிரியைக்கு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்வின்ராஜை நேற்று கைது செய்து தஞ்சை நீதிபதி முன் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

Tags : Tanjore , Thanjai Private College, Professor, Jail for Professor
× RELATED எத்தியோப்பியாவில் அசத்தும் மதுரை பேராசிரியர்