×

பொதுப்பணித்துறை விடுதியின் சுற்றுச்சுவர் இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகள்: பவானிசாகரில் பரபரப்பு

சத்தியமங்கலம்: பவானிசாகரில் உள்ள பொதுப்பணித்துறை விடுதியின் சுற்றுச்சுவரை காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. நேற்று முன்தினம் விளாமுண்டி வனப்பகுதியை விட்டு வெளியேறிய 4 காட்டு யானைகள் பவானிசாகர் நகர்ப்பகுதிக்குள் புகுந்தன. அங்குள்ள அரசு அலுவலர் குடியிருப்பு பகுதிக்கு சென்ற யானைகள் சாமிக்கண்ணு என்பவரது வீட்டுத்தோட்டத்தில் இருந்த வாழை மரங்களை தின்றது.

மேலும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதி சுற்றுச்சுவரை உடைத்து சேதப்படுத்தின. இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டினர். யானைகள் ஊருக்குள் புகுந்த சம்பவம், அப்பகுதி மக்களை பீதியடைய செய்தது. இரவு நேரத்தில் வனத்துறையினர் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Public Works Department, Wild Elephants, Bhawanisagar
× RELATED எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்!