×

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் படித்துறை அமைக்கப்படுமா?... பொது மக்கள் எதிர்பார்ப்பு

மார்த்தாண்டம்: மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றி கோதையாறு, பறளியாறு, குற்றியாறு, சிற்றாறு இணைந்து திருவட்டாறு அருகே மூவாற்றுமுகத்தில் இணைந்து, தாமிரபரணியாக உருவாகி, குமரி மாவட்டத்தை வளம் கொளிக்க செய்கிறது. மேற்கு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை குழித்துறை தாமிரபரணி ஆறுதான் தீர்க்கிறது. குழித்துறை நகராட்சி, பாகோடு, நல்லூர், உண்ணாமலைக்கடை, மெதுகும்மல் உள்பட பல உள்ளாட்சி அமைப்புகள் தாமிரபரணி ஆற்றில் உறைகிணறுகளை அமைத்துள்ளன. இது தவிர குழித்துறை கூட்டுக்குடிநீர் திட்டம், கடற்கரை கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் விளாத்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் போன்றவையும் தாமிரபரணி ஆற்றை நம்பியே செயல்படுகின்றன.

ஆடி மாதம் இறுதி அமாவாசை நாளில் பொது மக்கள் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னோருக்கு பலிகர்மம் நடத்துவர். இதையொட்டி வாவுபலி பொருட்காட்சியை ஆண்டுதோறும் குழித்துறை நகராட்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குழித்துறை தபால் நிலைய சந்திப்பு, மார்த்தாண்டம் வெட்டுவெந்நியை இணைக்கும் முக்கிய பகுதியாக குழித்துறை தடுப்பணை உள்ளது. இதன் அருகே பொது மக்கள் குளிக்கும் வகையில் 2 படித்துறைகள் உள்ளன. இவை வாவுபலி மைதானத்தையொட்டி ஆற்றின் ஒரு கரையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆற்றின் மறுகரையில் படித்துறைகள் எதுவும் இல்லை.

இதேபோல் அந்த பகுதி பாழடைந்து புதர்மண்டி காணப்படுகிறது. இந்த பகுதியில் படித்துறைகள் அமைத்தால் கண்ணக்கோடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்ைக எடுத்து தாமிரபரணி ஆற்றில் வெட்டுவெந்நியை ஒட்டிய கரையோரம் 2 படித்துறைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் பொது மக்கள் பயனடைவதோடு, புதர் மண்டி கிடக்கும் அந்த பகுதி சுத்தம், சுகதாரத்துடன் காணப்படும் என்பது குறிப்பிடதக்கது.

Tags : river ,Thiruparani ,public ,General Public ,Thiruparani River , Kuttiyaparai Thambaraparani, Gaddipuram
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை