×

குண்டுவெடிப்புகளுக்கு இடையில் பதவியேற்பு: 2-வது முறையாக ஆப்கானிஸ்தான் அதிபராக பதவியேற்றார் அஷ்ரப் கனி

காபூல்: ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவி ஏற்பு விழாவின் போது குண்டு வெடித்ததால் பதற்றம் நிலவி வருகிறது. அஷ்ரப் கனி அதிபராக பதவி ஏற்றுக் கொண்டிருந்த போது அருகிலேயே பலமுறை குண்டு வெடித்ததால் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் கடந்த செம்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் அஷ்ரப் கனி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட அப்துல்லா தோல்வி அடைந்தார். இவர் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தவர்.

ஆனால் அஷ்ரப் கனி வெற்றி பெற்றது செல்லாது, முறைகேடாக தேர்தல் நடந்துள்ளது, அவர் அதிபராக பதவியேற்க கூடாது என அப்துல்லா போர்க்கொடி தூக்கிவந்தார். இதனை பொருட்படுத்தாமல் நான் இன்றைய தினம் அதிபராக பதவியேற்பதாக உலக மக்களுக்கு அறிவித்தார். 2 வது முறை தேர்வு செய்யப்பட்ட அஷ்ரப் கனி பதவியேற்கும் விழா மிக எளியமுறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு வெளியே பலத்த குண்டுவெடிப்பு சத்தங்கள் எழுந்தன.

குண்டு சத்தத்தைக் கேட்டு கூட்டத்தினர் களையத் தொடங்க, அஷ்ரப் கானியோ தொடர்ந்து அதிபராக உறுதி மொழி ஏற்றுக் கொண்டிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை சமீபத்தில் தோஹாவில் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

அஷ்ரப் கனி கருத்து

குண்டுவெடிப்புகளுக்கு இடையே உறுதிமொழி ஏற்றது குறித்து அஷ்ரப் கனி கூறும்போது, “நான் புல்லட் புரூஃப் அணிந்திருக்கவில்லை. சட்டை மட்டுமே அணிந்திருக்கிறேன். நான் என் உயிரை இழக்க நேர்ந்தாலும் இங்குதான் இருப்பேன்” என்று தெரிவித்தார்.

Tags : Blasts ,Ashraf Ghani ,Afghan ,President , Bombing, swearing in, Afghanistan, Ashraf Kani
× RELATED பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவில்...