×

மரக்காணம் அருகே பொது வழியை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை: அதிகாரிகள் எச்சரிக்கை

மரக்காணம்: மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்டது கூனிமேடு ஊராட்சி. இந்த ஊராட்சியில் இ.சி.ஆர் சாலையில் இருந்து கடற்கரை பகுதிக்கு பொதுவழி செல்கிறது. இந்த கடற்கரை பகுதியில் வக்புவாரியத்திற்கு சொந்தமாக சுமார் 14 ஏக்கர் இடம் உள்ளதாக கூறுகின்றனர். இங்குள்ள கடற்கரை பகுதி சிறிய சுற்றுலா இடம்போல் உள்ளதால் மாலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் இங்கு வந்துசெல்வது வழக்கம். இந்நிலையில் இங்குள்ள பொது இடத்தை ஒரு சில அமைப்பை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தில் மதில் சுவர் அமைத்து நீண்டகாலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையில் கேட் அமைத்து விட்டதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்தனர். இதையடுத்து மரக்காணம் வட்டாட்சியர் ஞானம், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பிரச்னைக்குரிய இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்கள் வழக்கம்போல் செல்லும் சாலையை, யாரும் ஆக்கிரமிப்பு செய்து கேட் அமைக்கக் கூடாது. பொது இடத்தை வழிமறித்து மதில் சுவரோ அல்லது கேட்டோ அமைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்
படும் என்று கூறியதுடன், பொதுவழியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு கேட்டை அப்புறப்படுத்தினர்.

Tags : road ,Marakana , marakanam, occupation, action, authorities, alarm
× RELATED சுந்தராபுரம்-மதுக்கரை சாலை பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து