×

காடையாம்பட்டி அருகே வனகண்டா மலையில் காட்டுத்தீ; அரிய வகை மூலிகைகள் சாம்பல்

காடையாம்பட்டி: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே டேனிஸ்பேட்டை வனப்பகுதியில் வனகண்டா மலை குன்றுகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் போதிய மழை பெய்யாததால் மலை குன்றுகள் வறண்டுபோய் காணப்படுகிறது. தொடர்ந்து வனப்பகுதியில் புல் பூண்டு மரம் செடி கொடிகள் அனைத்தும் காய்ந்து சருகாகி வருகிறது. வனகண்டா மலைப்பகுதியை ஒட்டி காஷ்மீர்- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
இந்த சாலை வழியாக செல்வோர், புகைத்து விட்டு சிகரெட் துண்டுகளை அணைக்காமல் வீசி செல்வதால் காய்ந்து கிடக்கும் இலை சருகுகள் தீப்பற்ற வனப்பகுதிக்கு பரவி வருகிறது.

வனத்திலும் அனைத்து செடி கொடிகளும் காய்ந்து சருகாகி கிடப்பதால் அடிக்கடி கொளுந்து விட்டு எரிவது வாடிக்கையாக உள்ளது. இதனால், அரிய வகை மூலிகைகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வனகண்டா மலைப்பகுதில் அடிக்கடி தீப்பற்றி எரிவது வாடிக்கையாக உள்ளது.

வாகனத்தில் செல்வோர் பீடி, சிகரெட்டுகளை அணைக்காமல் வீசி செல்வதாலேயே தீப்பிடித்து வருகிறது. இதனால், மலைப்பகுதியில் உள்ள அரிய வகை மூலிகை செடிகள் கருகி சாம்பலாகி வருகின்றன. எனவே, வனத்துறையினர் கண்காணிப்பு பணியை முடுக்கி விட வேண்டும். மேலும், தீ தடுப்பு நடவடிக்கையாக வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

Tags : hill ,Kadaiyampatti ,Vanakanda Mountain , Kadaiyampatti, Vanakanda Mountain, Wildfire
× RELATED பொலிவிழந்து காணப்படும் எழில் கொஞ்சும் ஏலகிரி மலை