×

கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்படுமா?..பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பதில்

மும்பை: கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்படுமா என்ற கேள்விக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பதில் தெரிவித்துள்ளார். கெரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் இதுவரை 3,637 பேர் உயிரிழந்துவிட்டனர். சுமார், 1,07,350 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கெரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாற்பதைத் தாண்டியுள்ளது. இந்த நிலையில், வரும் 29ம் தேதி முதல் ஐபிஎல் டி20 போட்டிகள் தொடங்கவுள்ளது. சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்பட 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. வெளிநாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளனர். மும்பையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை–மும்பை அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி, ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம், பிசிசிஐ தரப்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படும், என கூறப்பட்டது. இந்த நிலையில், இவ்விகாரம் குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் வரும் 29ம் தேதி தொடங்கும். பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். கைகுலுக்குதல், செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம், என கூறியுள்ளார். கங்குலியின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : IPL ,matches ,Sourav Ganguly , Corona virus, IPL match, BCCI, Sourav Ganguly
× RELATED கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க வழிமுறைகளை வெளியிட்டது ஐசிசி