×

முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல்காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் கர்நாடக முன்னாள் கவர்னருமான ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் உடலுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். 82 வயதான ஹன்ஸ்ராஜ்பரத்வாஜ், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, 1992-96-ல் சட்டத்துறை இணை அமைச்சராகவும், 2004 முதல் 2009ம் ஆண்டு வரையில் மத்திய சட்டத்துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் 2009-14 ம் ஆண்டுகளில் கர்நாடக மாநில கவர்னராகவும் பணியாற்றி உள்ளார். நான் இன்னும் ராகுலை ஒரு தலைவராக கருதவில்லை. இதனை அவர் பின்னர் புரிந்து கொள்வார் என கூறி, ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஹன்ஸ்ராஜ்பரத்வாஜ் டெல்லியில் நேற்று  மரணம் அடைந்தார். தொடர்ந்து, ஹன்ஸ்ராஜ்பரத்வாஜ் இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ்
கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாப் நபி ஆசாத் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், பல தலைவர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

ரவிசங்கர் பிரசாத் இரங்கல்:

முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் மறைவுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், பரத்வாஜின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும், அவரது ஆன்மா அமைதியுடன் இருக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.


Tags : Manmohan Singh ,Hansraj Bharadwaj ,Rahul Gandhi , Former Prime Minister Manmohan Singh and Rahul Gandhi
× RELATED சொல்லிட்டாங்க…