×

பைபாஸில் பயணிகள், பக்தர்களை இறக்கிவிட்டு செல்லும் பஸ்கள்: சர்வீஸ் சாலை அமைத்தும் வருவதில்லை

* சமயபுரம் கோயிலுக்கு 2 கி.மீ நடந்து செல்லும் நிலை
* துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மண்ணச்சநல்லூர்: சமயபுரத்தில் சர்வீஸ் சாலையில் பஸ்கள் வராமல் பயணிகள், பக்தர்களை பைபாஸிலே நிறுத்தி இறக்கி விட்டு செல்லும் அவலநிலை தொடர்கிறது. இதுகுறித்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழகத்தில் சக்தி வழிபாட்டு தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருந்தாலும், சித்திரை தேரோட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் ஆர்வமாக வந்து கலந்துகொள்வார்கள். அன்று ஒருநாள் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மொட்டை அடிப்பது, காது குத்துவது மற்றும் விமான காவடி, பால் காவடி, அலகு காவடி என பல்வேறு விதமான காவடிகள் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தற்போது நேற்று (8ம்தேதி) சமயபுரம் மாரியம்மன் கோயில் முதல் பூ தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், நூற்றுக்கணக்கான வாகனங்களில் அம்மனுக்கு பூக்கொண்டு வருவார்கள். இதில் பாதயாத்திரை வரும் பக்தர்களை தவிர்த்து, பஸ்களில் வரும் பக்தர்களுக்குத்தான் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சர்வீஸ் சாலையில் பஸ்கள் வராமல் பைபாஸிலே பயணிகளை இறக்கிவிட்டு செல்வதால் தொடர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் கோயிலுக்கு செல்லும் பக்தர்களை இறக்கிவிட்டு சென்றுவிடுவதால் 2 கி.மீ. தொலைவிற்கு நடந்து செல்ல நேரிடுகின்றன. இதனை கருத்தில்கொண்டு தற்போது சமயபுரத்தில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளன.

இச்சாலையானது கடலூர், விழுப்புரம், விருதாச்சலம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், பெரம்பலூர் ஆகிய பகுதியில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள், சர்வீஸ் சாலை வழியாக வந்து பக்தர்கள் மற்றும் பயணிகளை இறக்கிவிட்டு செல்ல வேண்டும் என்பதற்காக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த சர்வீஸ் சாலையில் எந்த பஸ்களும் வருவதில்லை. பைபாஸில் நிறுத்தி பயணிகளையும், பக்தர்களையும் இறக்கிவிட்டு செல்கின்றனர். கோடைகாலம் என்பதால் பக்தர்கள் இறங்கி அம்மன் சன்னிதானத்திற்கு செல்வதற்கு இரண்டரை கி.மீ. நடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சர்வீஸ் சாலை வழியாக பஸ்கள் வந்து பயணிகளை இறக்கி விட்டுச் செல்ல வேண்டும் என்பதே பயணிகள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. எனவே துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டர், சர்வீஸ் சாலையில் பஸ்சை நிறுத்தி செல்வதற்கான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இச்சாலையானது கடலூர்,
விழுப்புரம், விருதாச்சலம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், பெரம்பலூர் ஆகிய பகுதியில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள், சர்வீஸ் சாலை வழியாக வந்து பக்தர்கள் மற்றும் பயணிகளை இறக்கிவிட்டு செல்ல வேண்டும் என்பதற்காக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளன.

Tags : devotees ,Passengers ,Service road , Passengers ,devotees ,bypass, Service road, coming
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...