×

தனுஷ்கோடி காப்பகத்தில் 245 குஞ்சுகள் பொரிப்பு கரையில் இருந்து விடைபெற்று கடல் சென்ற ஆமைக்குஞ்சுகள்

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி முகுந்தராயர்சத்திரம் கடற்கரையில் உள்ள ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் முட்டைகளில் இருந்து வெளிவந்த 245 ஆமை குஞ்சுகள் நேற்று கடலில் விடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகேயுள்ள தனுஷ்கோடி முகுந்தராயர்சத்திரம் கடற்கரை முதல் அரிச்சல்முனை கடற்கரை வரையுள்ள தென்பகுதி கடற்கரையில் ஜனவரி முதல் 5 மாதங்களுக்கு மன்னார் வளைகுடா கடலில் வாழும் கடல் ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். இந்த ஆண்டு ஜன. 18 முதல் தனுஷ்கோடி கடற்கரை மணலில் வனத்துறை அதிகாரிகளால் 4 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு முகுந்தராயர்சத்திரம் குஞ்சு பொரிப்பக மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இதில் 52 நாட்களுக்குப்பின் முதல்முறையாக நேற்று தனுஷ்கோடி முகுந்தராயர்சத்திரம் பொரிப்பகத்தில் முட்டையில் இருந்து வெளிவந்த ஆமை குஞ்சுகளை, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பக வனத்துறை அதிகாரி வெங்கடேசன் தலைமையில் தனுஷ்கோடி தெற்கு கடல் பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். கடற்கரை மணலில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள் கடல் நீரின் குளிர்ந்த வாடையை உணர்ந்து வேகமாக கடலை நோக்கி ஊர்ந்து சென்று ஆழ் கடலுக்கு சென்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சுமார் 13 ஆயிரம் கடல் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு தாமதமாக கடல் ஆமை இனப்பெருக்க காலம் துவங்கியதால் தனுஷ்கோடி பகுதியில் மே மாதம் வரை ஆமைகள் முட்டையிடும் என எதிர்பார்ப்பதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Dhanushkodi Archive , 245 Chicks , Dhanushkodi Archive
× RELATED நீலகிரியில் மழை குறைந்ததால் மைக்ரோ...