×

ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக வடகொரியா ஏவுகணை சோதனை: அண்டை நாடுகளான ஜப்பான், தென்கொரியா கவலை!

பியோங்யாங்: ஒரு வார கால இடைவெளியில் இரண்டாவது முறையாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் ஏற்கனவே பதற்றத்தில் உள்ள ஜப்பான் மற்றும் தென்கொரியாவை ஏவுகணை சோதனை மூலம் வடகொரியா மேலும் பதற்றமடைய செய்துள்ளது. வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஹாம்யோங் மாகாணத்தில் உள்ள சோன்டாக் இடத்திர் இருந்து 3 ஏவுகணைகள் அடுத்தடுத்து ஏவப்பட்டுள்ளன. இதனை உறுதி செய்துள்ள தென்கொரிய ராணுவம், ஏவுகணை சோதனை குறித்த படங்களையும் வெளியிட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரம் சிறிய தொலைவில் சென்று தாக்கும் திறனுடைய ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்திருந்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் வடகொரிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளை கவலையடைய செய்துள்ளது. அணு ஆயுத சோதனைகளை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் இரண்டு முறை நடத்திய பேச்சுகள் தோல்வியில் முடிந்தன. அணு ஆயுத தயாரிப்பை கைவிடுமாறு அமெரிக்க விடுத்த கோரிக்கையை வடகொரியா ஏற்காவிட்டால் கொருளாதா தடையை விலக்கிக்கொள்ள டிரம்ப் மறுத்துவி்ட்டார். இதன்பிறகு வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : neighbors ,South Korea ,North Korea ,Japan , North Korea, Missile Testing, South Korea, Japan
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...