×

பல நாடுகளில் உள்ள கைலாசா தூதரகங்களுக்கு விரைவில் சுற்றுப்பயணம் : நித்தியானந்தா அறிவிப்பு; அரசர் என்பதால் தம்மை யாரும் நெருங்க முடியாது என கொக்கரிப்பு

சென்னை : கைலாசாவுக்கு பல நாடுகளிலும் தயாராகி உள்ள தூதரகங்களுக்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக இந்தியாவில் தேடப்படும் சாமியார் நித்தியானந்தா கூறியுள்ளார்.அவர் எங்கு இருக்கிறார் என்பதே மர்மமாக உள்ள நிலையில், தனது இணையதள தொலைக்காட்சியில் அடிக்கடி தோன்றி பேசி வருகிறார். இந்த நிலையில், அமெரிக்க கண்டத்தில் உள்ள தீவு ஒன்றில் இருப்பதை அவர் வீடியோ ஒன்றில் உறுதிப்படுத்தி இருக்கிறார். கைலாசா என்ற அந்த தீவு பல்வேறு நாடுகளுடன் தூதரக உறவை தொடங்கிவிட்டதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

விரைவில் உலகம் முழுவதிலும் அமையுள்ள தமது நாட்டுத் தூதரகங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆன்மீக பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அவர் கூறியுள்ளார்.கைலாஸாவின் அதிபராக தன்னை அடையாளப்படுத்தும் சாமியார் நித்தியானந்தா, மா பிரேம ஆத்மா என்பவர் தான் கைலாஸா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் என்று அறிவித்துள்ளார். கைலாஸா நாட்டிற்கு வந்து தன்னை நேரில் தரிசிக்க விரும்புவோர் தமக்கு பாதபூஜை செய்ய விரும்புவோர் register@kailasa.org என்ற மின்னஞ்சல் வாயிலாக வெளியுறவு அமைச்சரை அணுகலாம் என்று கூறியுள்ளார்.

ஒரு நாட்டின் அரசர் என்பதால் தம்மை யாரும்  நெருங்க இயலாது என்று நித்தியானந்தா கூறியுள்ளார்.காரணம் சர்வதேச சட்டத் திட்டங்கள் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பது அவரது நம்பிக்கை.சாமியார் நித்தியானந்தாவின் பேச்சு அவரை வலைவீசி தேடி வரும் கர்நாடகம் மற்றும் குஜராத் மாநில போலீசாருக்கு சவால் விடுக்கும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 


Tags : Nityananda ,embassies ,no one ,countries ,Kailasa ,king , Karnataka, Gujarat, Kailasa, Tour, Saamiar, Ma Premya Atma, Nityananda
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...