×

தங்கும் விடுதிகளால் பிரபலமான தீவு!

நன்றி குங்குமம் முத்தாரம்

கடலுக்குள் அமைந்துள்ள சொகுசான தங்கும் விடுதிகளுக்காகவே பிரபலமான ஒரு தீவு போரா போரா. பிரெஞ்ச் பொலினீஸியாவில் சுமார் 12 சதுர மைல்கள் பரப்பளவில் விரிந்திருக்கிறது இந்தக் குட்டித் தீவு. அரிதான பவளங்களும் முத்துக்களும் இங்கே நிறைந்து கிடக்கின்றன.  தீவின் அழகையும் வசீகரத்தையும் ரசிப்பதற்காகவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்  இங்கே படையெடுக்கின்றனர்.

இங்கே உள்ள விடுதிகளில் ஓர்  இரவு தங்குவதற்கு குறைந்தபட்ச கட்டணமே 12 ஆயிரம் ரூபாய். இந்த விடுதிகளிலிருந்து சூரிய உதயம், அஸ்தமனத்தைப் பார்ப்பது தனி அனுபவம். இத்தீவில் சுமார் 11 ஆயிரம் பேர் வசித்துவருகின்றனர். ஆனால், தீவுக்கு வந்து போகிறவர்களின் எண்ணிக்கையோ லட்சங்களில் அடங்கும்.

Tags : island ,hostels ,Famous Island , Accommodation, popular island!
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...