×

முயல் வேகத்தில் உயருகிறது.. ஆனால் ஆமை வேகத்தில் குறையும் தங்க விலை : சவரன் ரூ.72 குறைந்து ரூ.33,584-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.33,584-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,198-க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.49.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சவரன் ரூ.34,000ஐ நெருங்குகிறது

*தங்கம்  விலை இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வந்தது. அதன் பிறகு  பிப்ரவரி மாதத்தில் நாளுக்கு நாள் விலை ஏற்றம் என்ற அளவில் தங்கம் விலை  உயர்ந்தது.

*விலை உயர்வு என்பது தினந்தோறும் வரலாற்று சாதனை என்ற அளவில்  இருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 21ம்  தேதி ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரத்தை தாண்டியது.

*அதாவது, அன்றைய தினம் ஒரு  கிராம் 4051 (சவரன் 32,408), 22ம் தேதி ஒரு சவரன் ₹32576க்கும்  விற்கப்பட்டது. 24ம் தேதி ஒரு சவரன் 33,328க்கு விற்கப்பட்டது. இதுவே  தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற சாதனையை படைத்தது.

*தொடர்ந்து  25ம் தேதி சவரன் 32,736, 26ம் தேதி 32,640, 27ம் தேதி 32,512, 28ம் தேதி  32,512க்கும், 29ம் தேதி 31,888க்கும் தங்கம் விற்பனையானது.

*தொடர்ந்து,  மார்ச் 2ம் தேதி 32,040, 3ம் தேதி 32,300, 4ம் தேதி 33,024க்கும் ஒரு  சவரன் விற்கப்பட்டது.

*கடந்த வெள்ளிக்கிழமை, கிராமுக்கு ₹98 அதிகரித்து ஒரு கிராம்  4,220க்கும், சவரன் 784 அதிகரித்து ஒரு சவரன் 33,760க்கும்  விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலையாகும் என்ற புதிய  சாதனையை படைத்தது.

*இந்த விலை ஏற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில்  ஆழ்த்தியுள்ளது. சவரன் 34 ஆயிரத்தை நெருங்கி வருவது விசேஷ தினங்களுக்காக  நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.  

*ஏற்கனவே, நகை வாங்க சிறுக, சிறுக சேர்த்த பணத்தில், விலையேற்றத்தால்  கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொருளாதார மந்தநிலை, கொரோனா, ரூபாய் சரிவு காரணம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க  மத்திய கூட்டுறவு வங்கிக்கான வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் புள்ளி 5 சதவீதம் குறைத்தார்கள். அதனால், வைப்பு நிதியில் முதலீடு செய்திருக்கும்  முதலீட்டாளர்கள், வைப்பு நிதியில் இருந்து முதலீட்டை எடுத்து தங்கமாக மாற்றி வருகிறார்கள். பொருளாதார மந்தநிலை, கொரோனா வைரஸ் தாக்குதலும் விலை உயர காரணம். பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள் முதலீடு  செய்யாமல் தொடர்ந்து தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர்.  

அமெரிக்க  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவில் வீழ்ச்சியை நோக்கி  சென்று கொண்டிருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதனிடையே சற்றும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூபாய் 104 குறைந்து ரூபாய் 33,656க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.33,584-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ரூ. 9 குறைந்து ரூ.4,198-க்கு விற்பனையாகி வருவது நகை வாங்குவோரை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.


Tags : Gold, shaving, silver, ornament, g, jewelry, ornament
× RELATED நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு...