×

'பேராசிரியர் க.அன்பழகன், மொழி உரிமைக்காகப் போராடியவர்; ஜனநாயக முறைப்படி பேரவை நடைபெற உதவியவர்' : மறைந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு சபாநாயகர் புகழாரம்

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று காலை 10 கூடியது. இன்றைய கூட்டத்தில் பேரவையில், மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு

*தமிழக அரசின் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி 14ம் தேதி துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

*இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் 17ம் தேதி முதல் 20ம்  தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து துறை வாரியான மானிய கோரிக்கை நடைபெறாமல் பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

*இந்த நிலையில் மார்ச் 9ம் தேதி சட்டப்பேரவை கூடும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடந்தது.  

*இந்த கூட்டத்தில், இன்று முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிப்பு

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று காலை 10 கூடியது.. கூட்டம் தொடங்கியதும்  மறைந்த திமுக பொதுச்செயலாளரும், 9 முறை எம்எல்ஏவாக இருந்தவருமான க.அன்பழகன், மறைந்த திமுக எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்), எஸ்.காத்தவராயன் (குடியாத்தம்) ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப. சந்திரன் ஆகியோர் மறைவுக்கு சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் இரங்கல் குறிப்பை வாசித்தார்.

திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனுக்கு சபாநாயகர் தனபால் புகழாரம்

அப்போது திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனுக்கு சபாநாயகர் தனபால் புகழாரம் சூட்டினார். சபாநாயகர்
தனபால் பேசுகையில்,அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்படபல்வேறு முக்கிய பொறுப்புகளை திறம்பட வகித்தவர் பேராசிரியர் அன்பழகன்.பேராசிரியர் க.அன்பழகன், மொழி உரிமைக்காகப் போராடியவர்; ஜனநாயக முறைப்படி பேரவை நடைபெற உதவியவர். எதிர்க்கட்சிகளும் ஏற்கத்தக்க வகையில் ஆணித்தரமாக வாதங்களை முன்வைத்து பேசியவர் க.அன்பழகன்.அவை முனைவர், மக்கள் நல்வாழ்வுத் துறை, கல்வி மற்றும் நிதி அமைச்சராக திறம்பட பணியாற்றியவர் க.அன்பழகன். என்றும் எளிமை, அடக்கம் என்று எளிமையாக வாழ்ந்தவர் அன்பழகன். பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறது. எனத் தெரிவித்தார்.

பேரவை அலுவல்கள் புதன்கிழமை ஒத்திவைப்பு

பின்னர் மறைந்த சட்டமன்ற உறுப்பினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்றைய பேரவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டது. 2 நிமிட மவுன அஞ்சலிக்கு பின் தமிழக சட்டப்பேரவை மார்ச் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  நாளை பேரவை கூட்டம் கிடையாது. தொடர்ந்து 11ம் தேதி வனத்துறை, 12ம் தேதி பள்ளி கல்வி துறை, உயர் கல்வி துறை என்று பல்வேறு துறைகள் மீது விவாதம் நடத்தப்பட்டு, அந்தந்த துறைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும். இன்று  தொடங்கும் கூட்டம் மொத்தம் 23 நாட்கள் நடைபெறுகிறது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் மக்கள் சார்ந்த பல்வேறு பிரச்னையை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு, கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் எழுப்பப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Tags : K.Anabhagan ,DMK ,General Secretary ,General Secretary Speaker , Congratulations, Resolution, Speaker, Dhanapal, Hon.
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி