×

‘கொரோனா குறித்து செல்போனில் பிரசாரம் மாநில மொழிகளில் இருக்க வேண்டும்’: சரத்குமார் அறிக்கை

சென்னை: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கை: உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள, அலைபேசியின் காலர் டியூன் வாயிலான விழிப்புணர்வு பிரசாரம், அந்தந்த மாநில மொழிகளில்  பாமர மக்களுக்கும் புரியும் வகையில் அமைய வேண்டும்.

வாடிக்கையாளர் சேவைக்கு எப்படி அந்தந்த மாநிலத்திற்கான மொழிகளில் ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் சேவை அளிக்கின்றனவோ, அதுபோல, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு  மொழியினையும் அந்தந்த மாநில மொழிகளில் மாற்ற வேண்டும். மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருமலுடன் துவங்கும் காலர் டியூனை, விழிப்புணர்வு வாக்கியங்களை மட்டும் பயன்படுத்தி  துவங்குமாறு மாற்றியமைக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் சரத்குமார் கூறியுள்ளார்.



Tags : Sarathkumar , Why should Coronation on the cell phone be in the state languages?
× RELATED பிரசாரத்துக்கு நடுவே கொஞ்சம் டான்ஸ்.....