திருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. திருச்ெசந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா கடந்த பிப். 28ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் நேற்று (8ம் தேதி) காலை வெகு விமரிசையாக நடந்தது. முதலில், காலை 6.10  மணிக்கு விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து 6.50 மணிக்கு நிலையம் சேர்த்தனர். காலை 7 மணிக்கு சுவாமி தேரோட்டம்  துவங்கியது. அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து  இழுத்து காலை 9 மணிக்கு நிலையம் சேர்த்தனர். 9.15 மணிக்கு புறப்பட்ட அம்பாள் தேர் 10.25 மணிக்கு நிலையை வந்தடைந்தது. 11ம் திருவிழாவான இன்று இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது.

Related Stories:

>